Saturday, 14 October 2017

நம்பிக்கை

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதை போன்றது' என்கிறார் எமர்சன். 'நானாவது முன்னேறுவதாவது' என்ற எண்ணம் நமக்குள் தோன்றச் செய்யாமல் இருப்பதில்தான்முன்னேற்றம் இருக்கிறதென உளவியல் ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.
''நம்பிக்கையை
நீங்கள் எங்கு வைத்தீர்கள்?
நரியின் கொம்பில் வைத்தீர்கள்
புலியின் பல்லில் வைத்தீர்கள்
ராசிக்கல்லில் வைத்தீர்கள்
ஜோசியரின் சொல்லில் வைத்தீர்கள்
ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்
கிளியின் கூட்டில் வைத்தீர்கள்
நம்பிக்கையை நீங்கள்
உங்களுக்குள் வைத்தீர்களா?''
என்று கேட்கிறது ஒரு கவிதை. பாஸ்டர் என்பவர், ''சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போலிருப்பர். மிகப்பெரும்
புயலாக பிரச்னை வீசினால், வேரோடு சாய்த்து விடுவர். சிலர் நாணல் போல் பிரச்னைகள் எப்படி புயலாக வீசினாலும், இது இயல்பு என அதற்கேற்றபடி வளைந்து தெளிந்து கொடுத்து மீண்டும் தன் எண்ணத்தில் உறுதியில் நிமிர்வர்,'' என்பார்.
ஆங்கில கவிஞர் ஒருவர்கூறுகிறார்.
'தோற்று விடுவோமோ என்று நீ கருதுவாயானால் நிச்சயமாக தோற்றவனே',
உன்னால் ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நினைப்பாயானால் அக்
காரியத்தை ஒருக்காலும் உன்னால் செய்ய முடியாது. உங்களால் முடியாதென்று நீங்கள் கைவிட்டதை எங்கோ, யாரோ செய்து முடித்திருப்பார்கள். ''தலைவிதியல்ல; தன்னம்பிக்கையே உங்களை உருவாக்குகிறது'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
வெற்றி சூத்திரம் : ஒருகாரியத்தை ஆரம்பிக்க உங்கள் மனம் முடிவெடுத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது; முதலில் அது சம்பந்தப்பட்ட துறைக்குரிய விபரங்களை சேகரியுங்கள். பின்னர் அந்த விபரங்களை பற்றி ஆராயுங்கள். ஆராய்ந்த பின் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள். அந்த முடிவை திடமான நம்பிக்கை யுடன் செயல்படுத்துங்கள்.இது ஒரு வெற்றி சூத்திரம். இதைப்பயன்படுத்தி உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து பாருங்கள். தன்னம்பிக்கையுடன் அதை செயல்படுத்துங்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும்போது, அதைப்பற்றிய மனச்சித்திரம் ஒன்றை அழுத்தமாக உருவாக்கிக்கொண்டால், அதன் விளைவுகள் சிறப்பாக அமைகின்றன. 'முடியும்' என்ற நம்பிக்கையில்லாமல் எந்த காரியமும் முடிவதில்லை.
'முடியும்' என்ற எண்ணமும், கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மனிதனுக்கு இருக்கிற மிகப்பெரிய சக்திகளாகும். இந்த நம்பிக்கைகள் செய்கின்ற காரியத்தில் ஊக்கத்தை தோற்றுவிப்பதோடு காரியம் நிகழ்வதற்கு சாதகமாக சூழ்நிலையினையும் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது. பிரிஸ்டல் என்கிற சிந்தனையாளர், தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.கடலில் மீன் பிடிப்பதற்கு பலரும் செல்கிறார்கள். சிலருக்கு மீன் நிறைய கிடைக்கிறது. வேறு சிலருக்கு அவ்வாறு நிறைய கிடைப்பதில்லை. கடலில் ஒரே இடத்தில் இவர்கள் மீன்
பிடிக்கிறார்கள். ஒரே சமயத்தில் மீன் பிடிக்கிறார்கள். ஒரே மாதிரியான உணவை கடலில் வாரி இறைத்துத்தான் மீன்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆயினும் சிலருக்கு மட்டும் மீன் நிறைய கிடைக்கிறது. சிலருக்கு அவ்வாறு கிடைப்பதில்லை.
நம்பிக்கையே வாழ்க்கை : சிலருக்கு தொடர்ந்து நிறைய கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்கின்ற பிரிஸ்டல் யார், யாருக்கு மீன் எப்போதும் நிறைய கிடைக்கிறதோ, அவர்களிடம் தனிமையில் சென்று பேசிப் பார்த்திருக்கிறார்.
அவர் சொன்ன ஒரு விஷயம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'நாங்கள் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் மட்டும் செல்வதில்லை. நிறைய கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடனும் செல்கிறோம்'.மீன் அதிகமாக கிடைக்காதவர்களிடமும் பிரிஸ்டல் பேசிப் பார்த்திருக்கிறார். அவர்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை என்பதை அவர் தெரிந்துக்கொண்டார்.வாழ்க்கை என்பது நம்பிக்கை யின் மீதுதான் கட்டப்படுகிறது. இந்நம்பிக்கை செயல்படவேண்டுமானால் 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும்.நான் சிலரை பார்த்திருக்கிறேன். ஆக்க ரீதியான கோஷங்களை மேஜையின் முன்னால் எழுதி வைத்திருப்பார்கள். இந்த கோஷங்களை திரும்ப திரும்பப் பார்க்கும்போதும், படிக்கும் போதும் அவர்கள் மனதில் அவை சித்திரமாக படிந்து, செயல்பட அவை அவர்களை ஊக்கப்படுத்துகின்றன.எப்படி பார்த்தாலும் 'முடியும்' என்ற நம்பிக்கையும் அது மனதில் பதியும்போது ஏற்படும் அழுத்தமும் காரிய சாதனைக்கு துணையாயிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நடக்கும் என்று நம்பினால் நடக்கும், முடியும் என்று முயன்றால் முடியும்.விதைக்கிறவனே அறுக்கிறான். உழைக்கிறவனே ஊதியம் பெறுகிறான். கேட்கிறவனுக்கே கிடைக்கிறது. உழைக்காமல் எந்தக்காரியமும் நடப்பதில்லை. பலன் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் பாடுபடுகின்றவனாகவும் இருக்க வேண்டும்.
வள்ளுவன் வாக்கு
'மெய்வருத்தக்கூலி தரும்' என்கிறார் வள்ளுவர். உடலை வருத்தினால் அதற்குரிய கூலி கிடைக்கும் என்கிறார் அவர். உழைத்தால் உழைப்பதற்கேற்ற ஊதியம் கிடைப்பது உறுதி
என்கிறார் திருவள்ளுவர். விதியைக்கூட புற முதுகிட்டு ஓடச்செய்துவிட முடியும் என்று வள்ளுவர் சொல்கிறார். சோம்பல் இல்லாமல் தொடர்ந்து முயற்சியை மேற்கொள்கின்றவர்கள் விதியையும் ஓடஓட விரட்டுகின்ற சக்தி படைத்தவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது
வள்ளுவரின் கூற்று.
'ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்'
என்பது குறள்.எண்ணத்தில் உறுதி இருந்தால் எண்ணிய விஷயங்கள் ஈடேறு கின்றன. நீங்கள் எண்ணுகிறபடியே எல்லாம் நடக்கும். உங்களுடைய எண்ணத்தில் மட்டும் நீங்கள் உறுதியாக இருந்தால் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆக, ஒன்று நடக்க வேண்டுமென எண்ணுவது மட்டும் போதாது. அந்த எண்ணத்தில் அழுத்தமான உறுதி நமக்கு இருக் வேண்டும்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்'
எண்ணத்துக்கு உரியவர்கள் உறுதியான மனப்பான்மை உடையவர்களாக இருந்தால், அவர்கள் எதை எண்ணுகிறார்களோ, அது நிச்சயம் நடக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.
இந்த கண்ணோட்டத்தோடு வரலாற்றை படித்தால், பல உண்மைகள் தெளிவாகும். உலக அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்று எண்ண வேண்டாம். நம்மை சுற்றிலும் இருக்கிற சாதனையாளர்கள் அனைவரும்கூட,
நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெற்றவர்களே.மரக்கட்டைகளாலான வீட்டில் குடியிருந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையில் குடியேறிய வரலாறு அமெரிக்காவில் மட்டும் நிகழக்கூடிய சம்பவம் என்று நாம் கணக்கு போட
வேண்டியதில்லை.ஆகவே எண்ணங்களுக்குள்ள வலிமையை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். பிறகு உங்கள் எண்ணத்தை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு
ஏற்பட வேண்டும். இந்த நம்பிக்கை வலிமையாகும்போது, நீங்கள் தானாகவே முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். முயற்சி தொடர தொடர பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பலன்கள் புதிய நம்பிக்கைக்கு அஸ்தி வாரமாகின்றன. இதுவே ஒரு சக்கர செயல் முறையாகி மேலும் மேலும் வெற்றிகளை குவிக்கும் சக்தி யாக மாற்றம் பெற்று விடுகிறது.எவ்வளவு பாதக மான சூழ்நிலைகளை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும், ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். 'முடியாது' என்று சொல்வதற்கு புத்திசாலித்தனம் தேவையில்லை. திறமை தேவையில்லை. முயற்சி தேவையில்லை. உழைப்பு தேவையில்லை.நம்பிக்கையால் மலைகளை அசைக்கலாம். கடல்களை தாண்டலாம். கற்பனைகளை நிஜமாக்கலாம். எண்ணியதை ஈடேற்றிக்கொள்ளலாம். நினைத் ததை முடிக்கலாம். எந்த மனிதனுடைய ஆற்றலும் வெளியிலிருந்து அவனுக்கு கிடைப்பதில்லை.
உங்களால் முடியும் : அவனுக்குள்ளிலிருந்துதான் அதை அவன் பெறுகிறான். அதை பெறுகின்ற ஆசையும் முயற்சியும் அவனுக்கு இருக்க வேண்டும். உங்களால் முடியும் என்று நீங்கள் நம்புங்கள். ஆரம்பத்தில் லேசாக உருவாகும் இந்த நம்பிக்கை காலப்போக்கில் பலமடைய தொடங்கிவிடும்.இப்படி நம்பியவர்கள் மட்டுமே தான் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். எதிரில்இருந்து இளைஞரை பார்த்து கென்னடி கேட்டார். 'எதிர்காலத்தில் என்ன ஆகலாம் எனத்திட்டமிட்டிருக்கிறீர்கள்'. அந்த இளைஞர் 'பளிச்'சென்று பதில் சொன்னார். 'இப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த ஜனாதிபதி இருக்கையில் நான் அமர்வேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்'. ஆம்! அந்த இளைஞர்தான் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன்.

ஆம். 'முடியுமா என்பது மூடத்தனம் முடியாது என்பது கோழைத்தனம் முடியும் என்பதே மூலதனம்'

கனவு மெய்ப்பட வேண்டும்...




தூங்கும் போது வருவது அல்ல கனவு; நம்மைத் துாங்க விடாமல் செய்வது தான் கனவு; கனவு காணுங்கள்' என கூறி நம் எதிர்கால இலக்கை அடைய வழி காட்டினார், மறைந்த
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
  திண்ணிய ராகப் பெறின்"

என்றார் திருவள்ளுவர். நினைத்த பொருளை நினைத்தபடி அடைய முடியும். எண்ணியவர் செயல் வலிமை மிக்கவராக இருக்கும் போது என்பதாகும். இலக்கினை அடைய செயல் வலிமை மிகவும் அவசியம்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் : பொதுவாக ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்று நடக்கும் போது ஒவ்வொரு போட்டியாளரும் தன் வேகத்தை அதிகரித்து கவனச்சிதறல்களை நீக்கி, மனதை ஒருமுகப்படுத்தி செயல்படும் போது வெற்றிக்கனியை தட்டிப்பறிப்பது எளிதான காரியம் தான். அதுபோல் தான் மாணவர்கள் ஓய்வுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து விட்டு உழைப்பதன் மூலம் உயர்வை அடைய முடியும்.எல்லாநேரமும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதால் தான் கடிகாரம் எல்லா இடங்களிலும் உயரத்தில் இருக்கிறது. ஒரு கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கும் போதுஅதற்குள்ளேயே உள்ள அழகிய சிலை வெளிப்படுவது போல நம்மிடமுள்ள தேவையற்ற விஷயங்களையும், கவனச்சிதறல்களையும் நீக்கினால் நம்
சிறப்பம்சம் வெளிப்படும்.கல்வி என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். அதைக் கொண்டாடும் போது அது நமக்கு பிடித்த விஷயமாகிறது.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக"

இக்குறளில் எந்த இடத்திலும் துணைக்காலே வராத என்ற பெருமை உடையது. இன்று தலைகுனிந்து படிக்கும் புத்தகம் தான், நாளை நம்மை தலைநிமிர்ந்து வாழ வைக்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டால் வெற்றி : இந்த உலகம் எப்போதுமே வெற்றி பெறுவோரை மட்டும் தான் உயர்வாக பார்க்கும். எனவே வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் படிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவர். தோற்று விடுவோமோ என்ற சந்தேகத்துடன் படிப்பவர்களை வெற்றி நெருங்குவதில்லை.படிக்கிறோம் என்பதை வேலையாக நினைத்து ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பது மூளைச் சோர்வை ஏற்படுத்தும். ஏனெனில் நம் மூளையின் வலது பகுதி படைப்பாற்றல் குறித்து சிந்திக்கும் தன்மையுடையதாகும். மூளையின் இடது பகுதி தர்க்கரீதியான செயல்பாடுகளை சிந்திக்கும் தன்மையுடையதாகும். ஒரே பாடத்தைத் தொடர்ந்து
படிப்பதால் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டுமே செயல்படுவதால் சோர்வடைகிறது. இதை தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வேறு வேறு பாடங்களை படிக்கலாம்.
மாணவர்களே... மற்றவர்கள் கூறுவதற்காக படிக்காதீர்கள். மற்றவர்களுக்காக வாழாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள். பொதுவாக ஒரு முட்டை இரண்டு சூழ்
நிலைகளில் உடைபட வாய்ப்புகள் உள்ளன. ஒன்று வெளிப்புறத்திலிருந்தும், மற்றொன்று உள்புறத்திலிருந்தும் உடைபடலாம். வெளிப்புறத்திலிருந்து உடையும் போது, அங்கே ஒரு வாழ்க்கை முடிவடைகிறது. உட்புறத்திலிருந்து உடையும் போது அங்கே ஒரு வாழ்க்கை துவங்குகிறது. எனவே மாற்றம் என்பது உங்களுக்குள்ளே இருந்து துவங்க வேண்டும்.

சரியான திட்டமிடலும் நேர மேலாண்மையும் : சரியான திட்டமிடலும், நேர மேலாண்மையும் சாதிக்க நினைப்பவர்களுக்கு அவசியமானது. நேரத்தை வீணாக்கக் கூடாது. நேரம் விலைமதிப்பற்றது. இந்த உலகில் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய கடந்த காலத்தை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணக்காரன் கிடையாது. இன்றைய மாணவர்கள் சினிமா நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு அவர்கள் தொழிலின் மீது மரியாதை உள்ளது. அதனால் அவர்கள் கடமையை சரிவர செய்கின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது என்பதற்காக அவர்கள் தொழிலை நிறுத்தப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல் தங்கள் பணியை செய்கின்றனர். அதுபோல மாணவர்களும் கவனச்சிதறல்களை தவிர்த்து
தங்கள் கடமையை சரிவரச் செய்ய வேண்டும். அப்போது தான் நாளைய உலகம் நம்மையும் கொண்டாடும். எப்போதுமே வலிகள் பிறக்காமல் வழிகள் பிறப்பதில்லை.
மனிதனைத் தவிர அத்தனை உயிரினங்களும் விடிவதற்காக காத்திராமல் விடியலுக்கு முன்பே விழித்து கொள்கிறது. அதனால் தான் அவைகள் ஆரோக்கியமாகவும், உற்சாகவும் இருக்கிறது.
கடமையை உணர்ந்து படித்தால் மதிப்பு உயரும்

பால் பசுவின் மடியில்சந்தோஷமாக இருந்தது. அதை பால் விற்கும் பெண் ஒருவர் கறந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தாள். பால் கொதித்தது; சூடு தாங்காமல் துடித்தது; வாய்விட்டு புலம்பியது. இறைவா எனக்கேன் இவ்வளவு சோதனை என்று அந்த பெண் பாலை அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் புளித்த மோரை கலந்தாள். அந்த வாடை பொறுக்க முடியாமல் இருந்தது. அதன் பின்பு பால் கட்டியாகி தயிராக மாறியது. திடமான அந்த தயிரை ஒரு மத்தை கொண்டு கடைந்தாள். வலி தாங்காமல் தயிர் அலறியது. அதிலிருந்து திடமான பொருளாக வெண்ணெய் எடுக்கப்பட்டது.

சற்று மூச்சு வாங்கியவெண்ணெயை ஒரு சட்டியில் வைத்து கொதிக்க வைத்தாள். வெண்ணெய் துடித்தது.துவண்டது. கொதித்த பின் ஏற்பட்ட திரவத்திற்கு நெய் என பெயரிட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தாள். அப்போது ஒரு வாடிக்கையாளர் அந்த பெண்ணிடம், ஒரு லிட்டர் பால் என்ன விலை என்றார். அந்த பெண் நாற்பது ரூபாய் என்றாள். பின் அந்த நபர் ஒரு லிட்டர் நெய் என்ன விலை என்றார். அதன் விலை ஐநுாறு ரூபாய் என அந்த பெண் கூறினாள். அப்போது தான் நெய்க்கு புரிந்தது தான் இவ்வளவு கஷ்டப்பட்டதும், தன் மதிப்பை உயர்த்துவதற்காக தான் என்று. அது போலத் தான் மாணவர்களும் கடமையை உணர்ந்து படிக்கும் போது, அவர்கள் மதிப்பும் உயரும்.இது போட்டிகள் நிறைந்த உலகம் அல்ல. வாய்ப்புகள் நிறைந்த உலகம். மருத்துவத்
துறையில் விருப்பமுள்ளவர்கள் மருத்துவத்தையும் பொறியியலில் விருப்பமுள்ளவர்கள் பொறியில் பாடத்தையும், எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அந்த துறையை தேர்வு செய்யலாம். எந்தப் படிப்பையும் சாதாரணமானது என்று மதிப்பிடாதீர்கள். நீங்கள் சாதாரணமாக நினைக்கும் படிப்பை படித்த எத்தனையோ பேர் உலகில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாளைய வரலாறுநம்மை பற்றி பேசட்டும் : சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்கள் கூட சாதிக்கும் காலம் இது. ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள் பட்டயக்கணக்கர் தேர்வில் நாட்டில் முதன்மை பெற்றதையும், கல்விப் பின்னணியே இல்லாதவர்களுக்கு மகனாக பிறந்தவர், இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் மாநிலத்தில் முதன்மை பெற்றதையும் வரலாறுகள் வலியுறுத்துகின்றன.இன்று படிப்பதற்கு வசதி ஒரு தடையல்ல. எத்தனையோ நல்ல இதயம் படைத்தவர்களும், அறக்கட்டளைகளும் படிப்பிற்காக நிதியுதவி செய்கின்றனர். எத்தனையோ
வங்கிகளும், கடனுதவி செய்கின்றன. மாணவர்களை வழிநடத்துவதற்காக அரசாங்கமும், தனியார் அமைப்புகளும் போட்டி போட்டு உதவுகின்றன. மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன்

இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். நாளைய வரலாறு நம்மை பற்றி பேசட்டும்...

Sunday, 29 January 2017

நிறைய படிச்சவங்களும், குறைவா படிச்சவணும்!


காலை, 10:00 மணிக்கு, அந்த, 'டிவி' ஸ்டேஷனுக்கு, காரில் வந்து இறங்கினான். பிரபல, 'ரகு டிராவல்'சின் சொந்தக்காரன் ரகு.
ரோஜா கொடுத்து வரவேற்றனர்; வரவேற்பறை சோபாவில் அமர்ந்து சிறு இளைப்பாறலுக்கு பின், ஸ்டுடியோவிற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தார், ஒருவர். எதிரில், சிறிய டீப்பாய்; அதன் மீது, பூ ஜாடி. ரகுவுக்கு, சட்டையின் உள்பக்கமாக நுழைத்து, மேல் பொத்தானுக்கு கீழ், 'காலர் மைக்' வைத்தனர். லைட்டிங், கேமரா கோணம் எல்லாம் சரி பார்த்து, ''சார்... 'டேக்' போலாமா...'' என்று, எதிர் இருக்கையில் அமர்ந்தார் நிருபர்.
''இது, 'ரிக்கார்டட் புரோக்ராம்' தான்; ஈசியா இருங்க,'' என்று சொல்லி, கேமரா பக்கம் திரும்பி, ''நேயர்களுக்கு வணக்கம்; எழுவோம் உயர்வோம்' நிகழ்ச்சி மூலம், வாரம்தோறும், வெற்றிகரமான தொழில் முனைவோர்களை, நாம் சந்தித்து வருகிறோம். அவ்வகையில், இன்று, நம்மிடையே உரையாட வந்திருப்பவர், இளம் தொழிலதிபர் ரகு. எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து, சென்னையில், பல இன்னல்களை எதிர்கொண்டு, படிப்படியாக உயர்ந்து, இன்று, 'டாப் டென்' டிராவல்ஸ்களில் ஒன்றாக உயர்ந்துள்ள, 'ரகு டிராவல்'சின் அதிபர் ரகு அவர்களை, இப்போது சந்திப்போம்...''
''வணக்கம் சார்... இன்றைக்கு, உங்கள் டிராவல்ஸ், மக்கள் மத்தியில், பிரபலமாக இருக்கிறது. பயணம் மேற்கொள்ளும் மக்களின், முதல் சாய்ஸ் உங்கள் நிறுவன வாகனமாகத் தான் இருக்கிறது. வர்த்தக ரீதியாகவும், பெரிய வெற்றியை அடைந்திருக்கிறீர்கள்; பாராட்டுகள். உங்களை பற்றிச் சொல்லுங்கள்.''
''நான், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவன். ஆரம்ப பள்ளியில் படித்ததோடு சரி... பெற்றோருக்கு உதவியாய், 20 வயது வரை கூலி வேலை தான் செய்தேன். வயல் வேலைகளை தவிர, வேறு எதுவும் தெரியாது.''
''சென்னைக்கு வரணும்ன்னு ஏன் தோணிச்சு?''
''ஒரு கட்டத்துல, விவசாயம் குறைஞ்சு போச்சு. தண்ணீர் தட்டுப்பாடு ஒரு பக்கம்; நிலம் வச்சிருந்தவங்க, விவசாயத்தை விட, லாபகரமா ஏதாவது செய்யணும்ன்னு விரும்பி, மாந்தோட்டம், செங்கல் சூளைன்னு மாறினாங்க... இன்னும் சிலர், வயல்களை துண்டு போட்டு, மனைகளாக்கினாங்க. இதனால், என்னை மாதிரியான உழைப்பாளிகள், கிராமத்துக்கு அப்பால், பிழைப்பை தேட வேண்டிய சூழ்நிலை. 'சென்னையில் குப்பை அள்ளினாலும் காசு; குப்பையை கிளறினாலும் காசு'ன்னு சொன்னாங்க. அதனால தான், சென்னைக்கு புறப்பட்டு வந்துட்டேன்.''
''நீங்க, சென்னைக்கு புறப்பட்டப்ப, அப்பா - அம்மா என்ன சொன்னாங்க; மத்தவங்க, 'ரியாக் ஷன்' என்ன?''
''பெத்தவங்க, ரொம்ப தொலைவுக்கு போறியேன்னு கவலைப்பட்டாங்க. ஆனால், சில பேர், 'மெட்ராசுக்கு பொண்ணு பாக்க போறயா'ன்னு கிண்டல் செய்தாங்க. 'வேலை தேடி போறேன்'னு சொன்னப்ப, ஒருத்தன் 'தலைமை செயலகத்துல, 'சீப் செகரட்டரி' வேலைக்கு போறான்டா'ன்னும், இன்னொருத்தன். 'இல்லடா... சினிமாவுல, அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு, ஆள் தேடுறாங்களாம்; அதுக்குத் தான் மெட்ராசுக்கு போறான்...' என்று, ஆளாளுக்கு கேலி செய்தாங்க.
''இத்தனைக்கும், அவங்க எல்லாம், என் நண்பர்கள் தான். ஆரம்பத்துல, எல்லாரும் ஒண்ணா படிச்சோம்; அப்புறம், அவங்க, மேல் படிப்பு படிச்சு, டிகிரியெல்லாம் முடிச்சு, வேலைக்கு, 'அப்ளை' பண்ணிட்டு, கோவில் மண்டபத்துல, ஜமா போட்டு, பேச்சு கச்சேரி நடத்திக்கிட்டிருப்பாங்க. நான் போனால் டீ, சிகரெட்டுன்னு வாங்கி வரச் சொல்வாங்க. அவங்க அளவுக்கு படிக்காததால, என்னை தாழ்வாத் தான் நடத்துவாங்க.''
''சென்னைக்கு வரும் போது, நீங்க இப்படி வெற்றிகரமான தொழில் அதிபரா வருவீங்கன்னு நினைச்சீங்களா?''
''நிச்சயமா இல்ல. ஏதோ ஒரு வேலை; அதை, நல்ல விதமா செய்து, நாலு காசு சம்பாதிக்கணும்; நாமும் சாப்பிட்டு, ஊருக்கும் அனுப்பணும்ன்னு தான், நினைச்சேன். சென்னையில் வந்து இறங்கியதும் எனக்கு கிடைச்ச முதல் வேலையே, டிராவல் ஏஜன்சி ஆபீசில், கூட்டிப் பெருக்குற வேலை தான்,'' என்றதும், ''நீங்க எந்த தொழில்ல முன்னேறப் போறீங்க என்கிறத ஆரம்பத்திலேயே, இயற்கை, அடையாளம் காட்டிருச்சு...'' என்றார் நிருபர்.
''ஆமாம்; தினமும், ஆபீசை சுத்தம் செய்து, வாசல் தெளிப்பேன்; பூ வாங்கி, சாமி படத்துக்கு போட்டு, பத்தி ஏத்தி வைப்பேன்; ரெகார்டுங்க, பில் புக், போன்னு எல்லாம் துடைச்சு, 'நீட்டா' வைப்பேன்; வர்றவங்களை கவனிப்பேன்; அப்படியே, அங்கு வந்து போற வாகனங்களை, கழுவுற வேலையும் சேர்த்து பார்த்தேன்; 'டிரிப்' போற வாகனங்கள்ள, கிளீனரா போயிருக்கேன்; இப்படியே ஒரு ஆறேழு வருஷத்துல, தொழில் எனக்கு பிடிபட்டுடுச்சு.''
''தனியா, 'டிராவல்ஸ்' ஆரம்பிக்கணும்ன்னு, எப்ப தோணிச்சு; எப்படி ஆரம்பிச்சீங்க?''
''எங்க ஓனர்கிட்ட இருந்த பழைய, 'மெட்டோடர்' வேன் ஒண்ண, விக்க இருந்தார். 'அதை, எனக்கு கொடுங்களேன் முதலாளி; பணத்தை கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறேன். அதை வச்சு பிழைச்சுக்க முடியுமான்னு பார்க்கறேன்'னு கேட்டேன்; என்ன நினைச்சாரோ... 'சரி எடுத்துக்க'ன்னார். அவர் ஆபீஸ்ல வச்சே, ஆட்களை சேர்த்து, நவக்கிரக கோவிலுக்கு, முதல், 'டிரிப்' போய் வந்தேன்; மக்களுக்கு சந்தோஷம்; எனக்கும், நல்ல ஆரம்பமா இருந்துச்சு.''
''அடுத்தடுத்த வளர்ச்சி, எப்படி ஏற்பட்டது?''
''சேவைக்கு முன்னுரிமை கொடுத்து, லாபத்தை ரெண்டாம் பட்சமா நினைத்து செயல்பட்டாலே வளர்ச்சி தானா வந்துரும். 10 வருஷ அனுபவம்; ரூட்டு தெரிஞ்சுருச்சு. பழைய வண்டி ஓட்டி சம்பாதிச்சதை, முதலா போட்டு, புது வண்டி எடுத்தேன். அடுத்தடுத்து நாலு கார்கள், நாலு வேன்கள் சேர்ந்துச்சு... அப்புறம், பஸ் பக்கம் கவனம் திரும்ப, அப்படியே, டிரெய்ன் டிக்கெட் புக்கிங், பிளைட் டிக்கெட் அரேஞ்ச் செய்றது, 'பேக்கேஜ் டூர்' அரேஞ் செய்றதுன்னு பலதும், ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தேன். இப்ப, வெளிநாட்டிலிருந்து, சிகிச்சைக்காக, நம் நாட்டுக்கு வருவோருக்கு, 'மெடிக்கல் டூர்' அரேஞ்ச் செய்றோம்; இது, 'ஆன்லைன்' வர்த்தகம்... நிலைமைக்கு ஏற்ப, நாமும், 'அப்-டேட்' ஆகிக்கணும். அந்த அடிப்படையில், 'ரகு டிராவல்ஸ் டாட் காம்' ஆரம்பிச்சேன். இதே லைன்ல இருக்கிற மத்த, 'ஆன்லைன்' நிறுவனங்களோடு, 'டை - அப்' வச்சுக்கிட்டு, தொழிலை முன்னெடுத்து போய்கிட்டிருக்கோம். முதலில், தனி மனிதனாக துவங்கியிருந்தாலும், பல பேருடைய ஒத்துழைப்பால், இது ஒரு கூட்டு முயற்சியால் ஏற்பட்ட வளர்ச்சியா தான் பாக்கறேன்.''
''பள்ளிப்படிப்பை முடிக்காத உங்களால், எப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கி, நிர்வகிக்க முடியுது... இதுக்கு, நிறைய கல்வியறிவு தேவைப்படுமே... அதை எங்க, எப்படி படிச்சீங்க?''
''படிச்சவங்களை வேலைக்கு வச்சுக்கிட்டேன்... திருப்தியான சம்பளம் கொடுக்கறேன். வேலையை அவங்க பார்த்துக்கறாங்க; நான் மேற்பார்வை தான்,'' என்றான்.
மேலும், தொழில் மற்றும் குடும்பம் சம்பந்தமாக, எதிர்கால திட்டங்கள் குறித்த கேள்விகள், அதற்கான பதில்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட பின், பேட்டி முடிந்து, புறப்படும் போது, ''கடைசியா ஒரு கேள்வி... நீங்க, கிராமத்திலிருந்து புறப்பட்ட நாளில், நண்பர்களே பரிகாசம் செய்தாங்கன்னு சொல்லியிருந்தீங்க... அவங்களை, திரும்ப பாத்தீங்களா; அவங்க, இப்ப, எங்க, என்ன நிலையில் இருக்காங்க?'' என்று கேட்டார் அந்த நிருபர்.
புன்னகைத்த ரகு, ''அவங்கெல்லாம், இப்ப எங்கிட்ட தான் வேலை பார்க்கறாங்க,'' என்றவன், ''ஒரு விஷயம்... ஆரம்பத்துல அவங்க எப்படியெல்லாம் பரிகாசம் செய்தாங்கன்னு சொன்னேன் இல்லையா... அதை, ஒளிபரப்ப வேணாம்; 'கட்' செய்துடுங்க. ஏன்னா, பேட்டி ஒளிபரப்பாகும் போது, அதை பார்த்தால், அவங்களுக்கு சங்கடம் ஏற்படலாம்.
''ஏற்கனவே, என்கிட்ட வேலைக்கு சேர்றதில், அவங்களுக்கு சங்கோஜம் இருந்தது. 'வேலைக்கு வந்ததா நினைக்காதீங்க; எனக்கு, உதவி செய்ய வந்ததா நினைச்சுக்குங்க. ஒரு நண்பனுக்காக, இதை செய்யக் கூடாதா'ன்னு கேட்டு, சகஜ நிலையில் வச்சிருக்கிறேன்; அந்த சுமூகமான நிலை கெட்டுடக் கூடாது... சரியா,'' என்று கேட்டுக் கொண்டான்.
''சரி சார்... அந்தப் பகுதியை நீக்கிடறோம். உங்க முன்னேற்றத்துக்கு, உழைப்பு, சேவை மனப்பான்மையை எல்லாம் காரணம்ன்னு சொன்னிங்க... ஆனால், உங்களை பழிச்சவங்களை கூட, அரவணைச்சதும் இல்லாமல், அவங்களுக்கு, எந்த வகையிலும், சங்கடம் உண்டாகிடக் கூடாதுன்னு நினைக்குறீங்க பாருங்க... அந்த குணம் தான், உங்களின் இந்த உயர்வுக்கும், இனிமேல் வரப்போகும் வெற்றிகளுக்கும், முக்கியக் காரணம்ன்னு நினைக்கிறேன். ஆல் த பெஸ்ட்!''

Sunday, 4 December 2016

2017ல் அதிக ஊதியம் தரக்­கூ­டிய வேலை­வாய்ப்­புகள் எவை?

         




மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், வர்த்­தக நிறு­வ­னங்­களின் தேவை­களும் மாறு­வதால், வேலை­வாய்ப்­பு­களை நாடு­ப­வர்­களும், அதற்­கேற்ற திறன்­களில் கவனம் செலுத்­து­வது அவ­சியம்.
சில ஆண்­டு­க­ளுக்கு முன் வரை, தகவல் தொழில்­நுட்பத் துறை, அதிக வேலை­வாய்ப்பு கொண்ட துறை­யாக கரு­தப்­பட்டது. இத்­துறை, அதிக ஊதியம் தரும் துறை­யா­கவும் அமைந்­தது. ஆனால், தற்­போது மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், தகவல் தொழில்­நுட்பத் துறை நிறு­வ­னங்­களே, வளர்ச்­சிக்­கான சவாலை எதிர் நோக்­கி­உள்­ளன. மேலும், தானி­யங்­கி­ம­ய­மாக்கல் மற்றும் செயற்கை நுண்­ண­றிவு போன்­ற­வற்றால், இத்­து­றையில் வேலை­வாய்ப்பு குறையும் என, அஞ்­சப்­ப­டு­கி­றது.
அண்­மையில், மனி­த­வளத் துறை வல்­லு­னரும், முத­லீட்­டா­ள­ரு­மான மோகன்தாஸ் பை, ‘தானி­யங்­கி­ம­யத்தால், 2025 ஆண்டு வாக்கில், 20 கோடி அள­வுக்கு வேலை­வாய்ப்பு இழப்பு ஏற்­ப­டலாம்’ என, கூறி­யி­ருந்தார். ஏற்­க­னவே, பல்­வேறு ஆய்வு அறிக்­கை­களும், வருங்­கா­லத்தில் ரோபோக்­களின் பயன்­பாடு அதி­க­ரிக்கும் வாய்ப்பு இருப்­பதால், வேலை­வாய்ப்­புகள் குறையும் என்றும் எச்­ச­ரித்­துள்­ளன.
அதிக ஊதியம்!
மாறி வரும் பொரு­ளா­தார சூழலில், பிர­கா­ச­மான வாய்ப்­பு­களை கொண்ட துறை­களும் பல இருக்­கின்­றன. சரி­யான தொழில் துறையை தேர்வு செய்து திறன் பெற்றால், அதிக ஊதியம் பெறும் வாய்ப்பு இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
இத­ன­டிப்­ப­டையில், 2017ல், அதிக ஊதியம் தரக்­கூ­டிய வேலை­வாய்ப்­பு­களை, பிஸ்னஸ் இன்­சைடர் இணை­ய­தளம் பட்­டி­ய­லிட்டு உள்­ளது. மார்க்­கெட்டிங் துறை பெரும் மாற்­றத்தை சந்­தித்து வரு­கி­றது. இதன் கார­ண­மாக, வளர்ச்­சிக்­கான புதிய பாதை காட்டும், குரோத் ஹேக்கர் எனும் பணி வாய்ப்பு முக்­கி­ய­மா­கி­றது.
பல்­வேறு மார்க்­கெட்டிங் சேனல்கள் மற்றும் பொருட்கள் வடி­வ­மைப்பு வழி­களில், வேக­மாக பரி­சோ­த­னை­களை முயற்­சித்து, நிறு­வ­னத்தின் வர்த்­தக வளர்ச்­சிக்கு உத­வக்­கூ­டிய, செயல்­திறன் வாய்ந்த வழி­களை கண்­ட­றியும் பணி­யாக இது அமை­கி­றது. இளங்­கலை பட்டம், இதற்­கான தகு­தி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்த பணியில் மாதம், 60 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற வாய்ப்­புள்­ளது.
இதே போல, டெக்­னிக்கல் ரைட்டர் எனப்­படும், தொழில்­நுட்ப எழுத்­தா­ளர்கள் பணி­க­ளுக்­கான தேவையும் அதி­க­ரித்து வரு­கி­றது. தொழில்­நுட்பம் சார்ந்த உள்­ள­டக்­கத்தை உரு­வாக்கக் கூடி­ய­தாக, இந்த பணி அமை­கி­றது. தொழில்­நுட்­பத்தை மைய­மாக கொண்டு இயங்கும் நிறு­வ­னங்­களில், இதற்­கான வேலை­வாய்ப்பு உள்­ளது; பட்­டப்­ப­டிப்பு போது­மா­னது. ஆங்­கி­லத்தில் எழுத்­தாற்றல் மற்றும் தொழில்­நுட்ப புரிதல் அவ­சியம். மாதம், 50 ஆயிரம் ரூபாய் முதல், 1.7 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்­புள்­ளது.
சமூக ஊடக மேலாளர்
இன்­றைய தகவல் தொழில்­நுட்ப யுகத்தில், பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் மற்றும் வங்­கிகள் தங்கள் விளம்­பர உத்­திக்­காவும், வாடிக்­கை­யா­ளர்­களை தொடர்பு கொள்­ளவும், சமூக ஊட­கங்­களை அதிகம் பயன்­ப­டுத்­து­கின்­றன. எனவே, நிறு­வ­னங் ­களில், சமூக ஊடக மேலாளர் எனும் பத­விக்கு முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்­துள்­ளது.
இத்­து­றையில், 10 ஆண்­டுகள் அனு­பவம் உள்­ள­வர்கள், இந்த பத­விக்கு பரி­சீ­லிக்­கப்­படு­கின்­றனர். நிறு­வன பிராண்டின் மதிப்பை சமூக ஊட­கங்­களில் நிர்­வ­கிப்­பது, இந்த பணியில் உள்­ள­வர்­களின் பொறுப்­பாக அமை­கி­றது; பட்­டப்­ப­டிப்பே போது­மா­னது. சமூக ஊடகத் துறையில் அனு­பவம் தேவை. மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை சம்­பா­திக்க வாய்ப்­புள்­ளது. இதே போல, உற­வுகள் தொடர்­பான பிரச்­னைகள் தீர ஆலோ­சனை அளிக்கும். ரிலே­ஷன்ஷிப் தெரபிஸ்ட் எனும் பணியும் புதிய வேலை­வாய்ப்­பாக உரு­வாகி வரு­கி­றது.
நவீன வாழ்க்கை நெருக்­கடி கார­ண­மாக, மன அழுத்தம் அதி­க­ரித்து, இளம் தம்­ப­தியர் வாழ்க்­கையில், பிரச்­னைகள் அதி­க­ரித்து வரும் நிலையில், உற­வுகள் தொடர்­பான ஆலோ­ச­னைக்­கான தேவையும் அதி­க­ரித்­துஉள்­ள­தாக, உள­வியல் வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். மாதம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்­புள்­ளது. தேடி­யந்­தி­ரங்­களில் முன்­னிலை பெறு­வது தொடர்­பான உத்­தி­களை வகுத்து கொடுக்கும், எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் வேலையும் பிர­கா­ச­மா­ன­தாக அமை­கி­றது.
மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை சம்­பா­திக்க வாய்ப்­புள்­ளது. இந்­தி­யாவில், ‘ஸ்டார்ட் அப்’ எனும், புது­யுக நிறு­வ­னங்கள் அதி­க­ரித்து வரும் நிலையில், இத்­து­றைக்­கான தேவையும் அதி­க­ரித்து வரு­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
சேமிப்பின் முழு பலனை பெற!
நம்மில் பலரும் சேமிப்பின் அரு­மையை உணர்ந்­தி­ருக்­கிறோம். அதன் படி சேமிக்­கவும் செய்­கிறோம். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது. சேமிப்பின் முழு பலனை பெற வேண்டும் என்றால், சேமித்த பணத்தை என்ன செய்­கிறோம் என்­பதும் முக்­கியம். உதா­ர­ணத்­திற்கு பலரும் பணத்தை சேமிக்க சிக்­க­னத்தை கடை­பி­டிக்­கலாம்: வீண் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­தலாம். ஆனால் இவ்­வாறு மிச்சம் செய்யும் பணத்தை என்ன செய்­கிறோம் என்­பதை கவ­னிக்க வேண்டும்.
சேமிக்­கப்­பட்ட தொகை, வேறு ஒன்­றுக்­காக செலவு செய்­யப்­படும் நிலை இருந்தால், அதனால் பயன் இல்லை. எனவே, செலவை மிச்சம் செய்து, சேமிக்கும் பணத்தை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை உரிய முறையில் முத­லீடு செய்ய வேண்டும். குறைந்த பட்சம் சேமிப்பு கணக்­கி­லா­வது போட்டு வைக்க வேண்டும். பின்னர் பொருத்­த­மான முத­லீட்டு சாத­னத்­திற்கு மாற்­றி­விட வேண்டும். அப்­போது தான் சேமிப்பு வளரும்.
நெருக்­கடி கற்­றுத்­தரும் நிதி பாடங்கள்
ரூபாய் நோட்டு செல்­லாது, என்ற அறி­விப்பு நட­வ­டிக்­கையால் ஏற்­பட்­டுள்ள சிக்­கல்கள் தற்­கா­லி­க­மா­னது என்­றாலும், இந்த நெருக்­க­டியை சமா­ளிக்கும் அனு­பவம், சில முக்­கிய பாடங்­களை கற்­றுத்­தந்­துள்­ளது. இந்த பாடங்கள், நிதி வாழ்க்­கையில் எப்­போதும் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யவை என்றும், நிதி திட்­ட­மி­டலில் பின்­பற்­றப்­பட வேண்­டி­யவை என்றும், நிதி வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்:
பட்ஜெட் முக்­கியம்
ரூபாய் நோட்டு நெருக்­கடி, பட்ஜெட் போட்டு செலவு செய்­வதன் அவ­சி­யத்தை புரிய வைத்­தி­ருக்கும். நிதி திட்­ட­மி­டலில் முதலில் சொல்­லப்­ப­டு­வதும் இது தான். பணப்­பு­ழக்கம் குறைந்­துள்­ளதால், மிகவும் அத்­தி­யா­வ­சிய செல­வு­க­ளுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற செல­வு­களை பின் பார்த்துக் கொள்­ளலாம் என தள்ளி வைத்து, தேவை­யில்­லாத செல­வு­களை முற்­றிலும் தவிர்த்­தி­ருப்போம். நிலைமை சரி­யா­னதும், இதை தளர்த்திக் கொள்­ளலாம் என்­றாலும், முதலில், சேமிப்­புக்கு பணம் ஒதுக்கி விட்டு, செல­வு­க­ளையும் திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும்.
பீதி வேண்டாம்
நிதி நெருக்­கடி ஏற்­படும் போது பயமும், பதற்­றமும் உண்­டா­வது இயல்பு தான். ஆனால், அதற்­காக முத­லீட்டு உத்­தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்­றில்லை. ரூபாய் நோட்டு செல்­லாது அறி­விப்­புக்கு பின், பலரும் தங்­கத்தில் முத­லீடு செய்ய முற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. தங்கம் பாது­காப்­பான முத­லீடு தான். ஆனால், முத­லீடு முடிவு என்­பது ஒரு­வரின் வயது, நிதி நிலை, நிதி இலக்­குகள் அடிப்­ப­டையில் தான் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். திடீர் நிகழ்­வு­களால் ஏற்­படும் உணர்­வுகள், நிதி முடி­வு­களை தீர்­மா­னிக்க கூடாது.
சேமிப்­புக்கு பின்!
சேமிப்பு முக்­கியம் என்­பதில் மாற்று கருத்து கிடை­யாது. ஆனால், சேமிக்கும் பணத்தை வீட்­டி­லேயே வைத்­துக்­கொள்­வதை விட சரி­யான முறையில் முத­லீடு செய்ய வேண்டும். அவ­சரத் தேவைக்­காக ரொக்கம் வைத்­தி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால், இந்த பணத்தை கூட குறு­கிய கால முத­லீடு திட்­டங்­களில் போட்டு வைக்­கலாம். லிக்விட் பண்ட், சேமிப்பு கணக்­குடன் இணைந்த வைப்பு நிதி என, பல வழிகள் உள்­ளன. வீட்­டி­லேயே பணத்தை வைத்­தி­ருக்கும் போது, அது மேலும் வளர்ந்து, பலன் தர வாய்ப்­பில்­லாமல் போகும்.
மாற்றம் அவ­சியம்

தொழில்­நுட்ப மாற்­றத்­திற்கு ஏற்ப, நாமும் மாறு­வது அவ­சியம். அரசும், வங்­கி­களும் டிஜிட்டல் வசதி பற்றி, அடிக்­கடி கூறி வந்­தாலும், பலரும் அதை பொருட்­ப­டுத்­தாமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால், இப்­போது நெருக்­கடி சூழலில் தான், பில் செலுத்­தவும், பண வர்த்­தனை செய்­யவும் டிஜிட்டல் வழி­மு­றைகள் எந்த அளவு பய­னுள்­ளவை என புரிந்­துள்­ளது. எனவே, எப்­போ­துமே தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்து கொள்­வது அவ­சியம். டிஜிட்டல் பரி­வர்த்­தனை வச­திகள் நேரத்­தையும் மிச்­ச­மாக்கும்.

Tuesday, 8 November 2016

அழகான வாழ்க்கைக்கு அடித்தளம்

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களிடம், தலையெழுத்தை நிர்ணயிப்பது அழகிய கையெழுத்து தான் என ஆசிரியர்கள் கூறுவதை கேட்டிருக்கலாம். அழகிய கையெழுத்து கொண்ட மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் கிடைக்கும். அழகாக எழுதுவோர் வகுப்பறையிலும் முதலிடம் பெறுகின்றனர். சமூகத்திலும், அலுவலகத்திலும் முன்னுரிமை வழங்கப்படும்.என்ன தான் சிறப்பாக படித்திருந்தாலும் கையெழுத்து சரியில்லை என்றால் மதிப்பெண் குறைந்து விடும். தேர்வுகளில் அழகாக இடம் பெறும் எழுத்துக்கள் அதை திருத்தும் ஆசிரியர்களின் மனங்களை கொள்ளையடிக்கிறது. தவறை கூட அறியாமல் செய்யும் அழகிய கையெழுத்து, அதிக மதிப்பெண்களையும் பெற்றுத்தருகிறது. பயிற்சியும் முயற்சியும் : இப்போது கூட தங்கள் கையெழுத்தை உரிய பயிற்சியும், முயற்சியும், ஆர்வமும் இருந்தால் அழகாக்க முடியும். மாணவர்களின் கையெழுத்து மேம்பட இன்று அரசு உதவி பெறும் பள்ளி மணவர்களுக்கு தரமான முறையில் இரண்டு, நான்கு கோடு நோட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் குறைபட்டு பாழ்பட்டு கிடக்கும் கையெழுத்தை துாக்கி நிறுத்தி, அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வித்துறை ஆகியவை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்து அதை மாணவர்களுக்கு கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றன. ஓவியமும் அவசியம் : மாணவர்களிடம் கையெழுத்து மேம்படுவது போல, அவர்களிடம் பாடம் மற்றும் பாடம் சாரா வகையில், படம் வரையும் ஆர்வத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது. பாடங்களுடன் இணைந்த அறிவியல், கணக்கு பாட படங்கள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்று தருகிறது. அழகிய படங்களை மாணவர்கள் விடைத்தாளில் வரையும் போது, முழுமதிப்பெண் கிடைக்க வாய்ப்பாக அமைகிறது. ஓவிய திறன் மேம்பட அரசு இன்று, பள்ளிகளில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. ஓவிய ஆசிரியர்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். உலக பொது மொழி பேசா மொழி : ஓவியம் என்பது பேசா மொழி மட்டுமல்ல உலக பொது மொழி. மொழி, நாடு, மாநிலம் என வேறுபடலாம். ஓவியம் மட்டும் எல்லா மொழி பேசுபவர்களையும் ஒரே விதமாக உணர வைக்கும். ஆதி மனிதன் ஓவியம் மூலமே வரைந்து காட்டி பிறருடன் தொடர்பு கொண்டான். ஓவியம் எழுத்துக்களின் தாய் என்றழைக்கப்படுகிறது.அனைத்து மொழிகளுக்கும் முன்னோடி ஓவியக்கலை. நிகழ்ச்சிகளை அறிய ஓவியங்கள் துணைபுரிகின்றன. கதையுடன் தொடர்புடைய ஓவியங்கள், மனதில் நிலைத்து நின்று அக்கதைக்கு வலு சேர்க்கின்றன. பத்திரிகை கார்ட்டூன்கள் என்றும் வாசகர்களிடம் செல்வாக்குடன் திகழ்கிறது. புகழ்பெற்றவர்களின் கார்ட்டூன்கள், காலத்தால் அழியாமல் நின்று செய்தி கூறி கொண்டே இருக்கின்றன. சிந்தனை வளர்க்கும் ஓவியம் : அறிவாற்றல், சிந்தனையும் வளர்த்து கொள்ள ஓவியம் துணை புரிகிறது. மனம், கை, கண் இவை மூன்றும் ஒருமுகமாக செயல்பட வைப்பது ஓவியமே. தொழில் கல்வியில் ஓவியத்தின் பங்கு அதிகம். காதால் கேட்பதை விட கண்ணால் பார்ப்பது மாணவர்களுக்கு நினைவு சக்தியை நிலைநிறுத்தும். வரைவதால், புலன்களின் மீது ஆதிக்கம் ஏற்படுகிறது. தன்னை ஒருமுகப்படுத்தி கொண்டு பொறுமையாகவும், சுத்தமாகவும் இருக்கப் பழகுகிறான். ஓவியத்தில் ஏற்படும் அதீத காதல் பின் நாளில் மிகச் சிறந்த ஓவியராக்கி விடும். இதன் மூலம் பணம் வரும். புகழ் கிடைக்கும். தாய் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்துடன் ஓவியம் அதிகம் தொடர்புடையது. அழகிய கையெழுத்து : மாணவர்கள் கற்றலை முழுமையாக அடைவதில் அவர்களின் கையெழுத்து முக்கிய பங்காற்றுகிறது. சரியான அளவு, உருமாறாது, போதிய இடைவெளி விட்டு மாணவரை எழுத பயிற்றுவிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். தமிழ், ஆங்கில மொழி கையெழுத்தை மேம்படுத்த தசைப்பயிற்சிகள், செயல்பாடுகள் எழுத்து பயிற்சிகள் அவசியமாகிறது.ஆரம்ப நிலையில் கரும்பலகையில் விருப்பம் போல கோடுகள், வளைவுகள், சுழிகள் போன்றவற்றை கிறுக்க வரைய பழக்க வேண்டும். அன்றாட வாழ்வில் காணப்படும் பொருட்களை எளிய முறையில் வரைய பழகுதல் வேண்டும். நேர்கோடு, படுக்கை கோடு, வளைவுகோடு, சாய்வு கோடு, முக்கோணம், சதுரம் போன்றவைகளை உபகரணங்கள் இன்றி வரைய பழகுதல் நல்லது. பயிற்சி அவசியம் : குழந்தைகள் எழுதுகோலை சரியான முறையில் உரிய கோணத்தில் கையாள கற்றுத்தர வேண்டும். கையெழுத்து பயிற்சியின் போது குழந்தைகளின் கண் மற்றும் கைகளின் ஒருங்கமைவு மிகவும் அவசியம். எழுத்துக்களின் வடிவங்களை அடியொற்றி எழுத செய்தல், சிறந்த பயிற்சியாக அமையும். வரைதல் பயிற்சியும் கையெழுத்தினை அழகானதாக்கும். அழகான கையெழுத்து என்பது வரமாகும். அதனை பயிற்சி எனும் தவத்தால் பெறலாம். வரியொற்றி எழுதுதல் பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்பது எழுத பழகுதலின் முதல் நிலை. வேகத்தை கூட்டி கையெழுத்தை திருத்தமாக எழுத பயிற்றுவித்தல் என்பது இரண்டாம் நிலையாகும். இளம் வயதிலேயே அழகிய கையெழுத்து என்ற நிலைக்கு மாறி விடுதல் எளிது. அழகிய கையெழுத்து பயிற்சி இன்று பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது. எந்த வயதிலும் கையெழுத்தை திருத்திக் கொண்டு சாதிக்கலாம். எனினும் இளம்வயதிலேயே அழகிய கையெழுத்தின் மீது மோகம் கொள்ள வேண்டும். குறையும் எழுத்து பழக்கம் : இன்று பொது மக்களிடம் எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்து கொண்டுவருகிறது. அலைபேசி வரவு, அதன் அபரிமிதமான வளர்ச்சி எழுதும் வாய்ப்பை குறைத்து விட்டது. எழுதுதல் ஒரு கலையே. முகநுால், குறுந்தகவல் என சுருக்கி கொண்டு வாழ்கிறோம். இதிலிருந்து விடுபட்டு தினமும் சில நிமிடங்களாவது எழுதுவதற்கு ஒதுக்குவோம். இன்று நம்மில் பலரும் பேனாவை தொட்டே பல ஆண்டுகள், பல மாதங்கள் ஆகிறது என்கிறார்கள். பாக்கெட்டில் இருக்கும் பேனா ஒரு கவர்ச்சி பொருளாகவே இருக்கிறது. அழகிய கையெழுத்து அழகான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதில் ஐயம் வேண்டாம்.

Monday, 7 November 2016

யாகாவாராயினும் நா காக்க!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஅதிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப்பிறத்தல் அதனினும் அரிது - அவ்வையாரின் வாய்மொழிக்கேற்ப மனிதனையும், விலங்கினையும்      பிரித்துக்காட்டுவது பேச்சு மட்டுமே. தன் பெயரை சொல்லவும், நமது சாதனைகள் வெளிப்படவும், பலருடன் தொடர்பு கொள்ளவும் மொழி கண்டிப்பாக வேண்டும். இடம், பொருள், ஏவல் கொண்டு பேசப்படும் பேச்சுக்கள் மட்டுமே நன்மை பயக்கும். மற்றவை நீங்காத துன்பத்தை தரும். தீதும் நன்றும் பிறர்தர வாரா இனிய உளவாக இன்னாது கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்ற குறளுக்கேற்ப, நல்ல சொற்கள் இருக்கும்போது தீய சொற்களை பேசுவது கனியிருக்கும்போது காய் பறிப்பது போன்றதாகும். நண்பர்கள், குடும்பம், சமுதாயம், மேடை என எங்கு பேசினாலும், நேர்மறை கருத்துக்களை கூற வேண்டும். தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்ற கூற்றிற்கு பதில் நம்பிக்கை இல்லாதவர் தோல்வி அடைவார்கள் என பேசுதல் கூடாது. இப்படி நடந்து கொண்டால், 'எனக்கு பிடிக்காது' என்று சொல்வதற்கு பதிலாக எனக்கு பிடித்த மாதிரி நடந்துகொள் என்று கூறலாம். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை மனித இனம் ஒன்றுமட்டுமே உறவுகளுடன் கூடிய சமுதாய வாழ்க்கையை நடத்துகிறது. தனிமனித வாழ்க்கை என்பது இனிமை சேர்க்காது. இன்றைய சூழலில் உறவுகளை தொடர்வது பெரும் சவாலாகவே உள்ளது. உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பது இல்லை. திருமணம் ஆகும்வரை பாசத்துடன் உள்ளோர் பின்னர் மாறிவிடுகின்றனர். சித்தப்பா, பெரியப்பா, பிள்ளைகள் ஒற்றுமையாக இருப்பது வெறும் 20 சதவீதம்தான் இருக்கும். காரணம் நாம்தான். சிறிய தீப்பொறி ஒன்றை ஊதி ஊதிப் பெரிதாக்கும் நமது பேச்சுக்கள்தான் காரணம். பெண்களால் உறவுகளில் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகளை சமாளிக்க, ஆண்கள்படும்பாடு சொல்லிமாளாது. நாவினாற் சுட்ட வடு உடலில் ஏற்பட்ட நெருப்புக்காயம் மருந்தினால் ஆறிவிடும். ஆனால் நாவினால் சுடப்பட்ட வடுவானது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இதில் பாதிக்கப்பட்டோர் இறப்பில்கூட சேராமல் இருக்கின்றனர். ஆழ்ந்த நட்பைக்கூட இந்த புறம்கூறும் பேச்சுக்கள் இழக்க செய்கின்றன. சுத்தமான பாலில் விழுந்த ஒரு துளி விஷம்போல சிலரது பேச்சுக்கள் பல்லாண்டு கால நட்பைக்கூட முறித்துவிடும். சொல் இழுக்கு 'வாயிலிருந்து வராத சொற்களுக்கு நீ எஜமான்வந்த சொற்களுக்கு நீ எதிரி' என்பதற்கேற்ப கவனமுடன் பேச வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமுடன் உரையாட வேண்டும். இளம்பெண்ணும், நடுத்தர வயதுள்ளவரை (தோற்றத்தில்) பார்த்து, 'இது யார் உங்க மகளா?' என கேட்க, அவரோ 'இல்ல, என் மனைவி' என்பார். 'கொஞ்சம் யோசித்து பேசியிருக்கலாம்' என நினைப்போம். குழந்தைகளை கூட்டிவரும் நபரை பார்த்து 'உங்க பேத்தியா' எனக்கேட்க, 'எனது பிள்ளைகள்' என்பார். கண்டிப்பாக நமது நாக்கில் சனிதான் குடியிருக்கிறது என நினைப்போம். கூர்மையான கத்தி போன்றது நமது பேச்சுக்கள் ஒரு உயிரையும் கொல்லும். நாம் பயன்படுத்துவதை பொறுத்து அமைகிறது. பணிபுரியும் இடங்களில் நாம் மென்மையாக பேசுவதன் மூலமே அனைவரையும் ஈர்க்க முடியும். மற்றவர்கள் பேசும்வரை கவனமாகவும், ஆர்வமாகவும் கேட்க வேண்டும். அதன் பின்னரே நமது கருத்துக்களை கூற வேண்டும். அவர் சொல்வது தவறு என்றாலும், வாக்குவாதம் செய்யாமல் நிதானமாக உண்மையாக எடுத்துக்கூற வேண்டும். நமது மேல் அதிகாரி சொல்வது தவறே என்றாலும், அதை நாம் காட்டிக்கொள்ளாமல் பேச வேண்டும். இதன்மூலம் சுமூகமான போக்கை நிலைநிறுத்த முடியும். மனைவியிடம் பேசும்போது வாழ்க்கையின் பெரும்பகுதியாகவும், நம்மில் பாதியாகவும் இருப்பவள் மனைவி. கணவன், மனைவி நல்ல புரிதலான பேச்சு மூலமே குடும்பம் மகிழ்ச்சியாக செல்லும். நல்ல தம்பதிகளால் மட்டுமே சிறந்த குழந்தைகளை வளர்க்க முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாதுவாக பேசுவதன் மூலமே, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்.மற்றவர்களை பாராட்டியும், வாழ்த்தியும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாகவே புகழ்ச்சியுரைகள் மற்றவர்களை ஈர்க்கும். நல்ல இனிமையான சொற்கள் மட்டுமே நம்மை மாமனிதனாக அடையாளம் காட்டும். செயல்படுத்துவோம். மகிழ்ச்சி அடைவோம். கேலியும், கிண்டலும் நகைச்சுவை என்பது கேட்போரின் மனதை வலிக்கச்செய்யாமல், மனம் விட்டு சிரிக்க வைக்க வேண்டும். மற்றவர்கள் காயப்படுத்தி கேலி செய்வதன் மூலம் சிரிக்க வைக்கக்கூடாது. ஏளனம் செய்து அதாவது உருவம், உயரம், குட்டை, பருமன், மெலிவு இவற்றை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது. நகைச்சுவைக்கும், கேலி கிண்டலுக்கும் நுாலிழை வித்தியாசமே உள்ளது.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தனது பாடலில், ''உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்பார். கத்தி, வாள், அம்பு, ஈட்டி, அரிவாள் என்று மற்றொருவர் பதில் சொல்வார். அதெல்லாம் இல்லை. 'நயவஞ்சகரின் நாக்குதான் பயங்கரமான ஆயுதம்' என்பார். தத்துவத்தோடு கூடிய நகைச்சுவையும் காலத்தால் அழியாமல் புகழ்பெறும். ஒரு மனிதன் எதனை காக்கவில்லை என்றாலும், நாவினை காக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர் முன் அவமானப்பட வேண்டும். இன்னாச்சொல் வேண்டாம் முதல் சந்திப்பின்போதே, வயது, திருமணம், குழந்தைகள், சம்பளம் பற்றி கேட்கும்போது, இதில் ஏதாவது குறை இருந்தால் கண்டிப்பாக அவரின் முகம் வாடிவிடும். துக்கம், அவமான துயரங்கள், கொடூரமான நோய்கள் இவற்றை விசாரிக்கும்போது மேலோட்டமாக பேசுங்கள். தோண்டித் துருவி, புலன் விசாரணை செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். வயது குறைந்தவர்களிடம் ஒருமையில் பேசாமல் பன்மையில் பேசினால், நம் மேல் வைத்திருக்கும் மரியாதை கூடி நமது நட்பை விரும்புவார்கள். பெண்களிடம் கண்களை பார்த்து பேசுவதும், நாகரிகத்தோடும், தெளிவாக பேசினால் நம் மீது மதிப்பு கூடும். பெண்களிடம் சிலேடையாக பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.மூன்றாம் நபர்களை புறம் கூறுவது, அடுத்தவர்களை பற்றி அதிகமாக சிந்திப்பது நமது மனதை குப்பை தொட்டியாக்கிவிடும். வாழ்க்கை துணையிடம் பேசும்போது பாராட்டுவதும், வாழ்த்துவதும் இனிமை சேர்க்கும் குறைகளைவிட்டு நிறைகளை மட்டும் பேசுங்கள். குறைகள் நிறைகளாக மாறி மகிழ்ச்சி பொங்கும். இல்லறத்தின் சிறப்பு நிதானமாகவும், விட்டுக்கொடுப்பதும், ஒருவர் கோபப்படும்போது மற்றொருவர் அமைதி காத்தலும், இனிய இல்லறத்தின் சிறப்புகள். தவறான வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது, வாழ்க்கை துணையிடம் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். உள்ளத்திலே உண்மையொளி உண்டாயின்வாக்கினிலே தெளிவு உண்டாகும் என்ற பாரதியின் வரிகளின்படி, மனம் தெளிவாக இருந்தால் மட்டுமே, நாவில் எழும் சொற்கள் தெளிவாக அமையும். புறம், கூறுதல், வஞ்சக எண்ணம், பொய் சொல்லல் மனதில் இருந்தால் தெளிவாக பேச்சு வராது. உளறல்களும், தடுமாற்றமும் நம்மை காட்டிக்கொடுத்துவிடும்.மனித வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, ஒவ்வொரு நாளும் இனிமையாய் அமைய நாவினை கட்டுப்படுத்தி இனிமையான சொற்களை மட்டும் பேசுவோமாக!

Sunday, 23 October 2016

எண்ணிய முடிதல் வேண்டும்

"எண்ணிய முடிதல் வேண்டும்
 நல்லவே எண்ணல் வேண்டும்
 திண்ணிய நெஞ்சம் வேண்டும்
 தெளிந்த நல்லறிவு வேண்டும்"

என்பார் மகாகவி பாரதியார்.

இந்த உலகத்தில் நாம் நினைக்கும் அனைத்தும் நடைபெற வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அவர்கள் நினைத்த இலக்குகளை நோக்கி, தினமும் பயிற்சியும் முயற்சியும் செய்பவர்களுக்குத்தான் நினைப்பது எல்லாம் நிறைவேறுகிறது.
பலரும் தங்களுடைய மனதிலே நல்ல எண்ணங்களை விதைப்பதற்குப் பதிலாக எதிர்மறையான எண்ணங்களை குப்பைகள் போல கூட்டி வைத்திருக்கிறார்கள் என்பதே சமுதாயக் கேடாக இருக்கிறது. அதனாலே பெரும்பாலானவர்கள் இங்கே விரக்தி மனப்பான்மை கொண்டு வாழும் நிலையினைப் பார்க்க முடிகிறது. அடுத்தவர்களைப் போல வாழ வேண்டும் என்ற ஆசையில் தனக்கான வாழ்வையும் லட்சியத்தையும் தொலைத்து விடுவதைக் காண முடிகிறது. சாதாரண தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத ஒரு மலட்டுச் சமூகத்தை உருவாக்கி வருகிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
வெற்றியாளர்கள் 'உங்கள் நண்பர்களை விடஎதிரிகளே உங்களை எப்போதும்நினைத்துக் கொண்டிருப்பார்கள்' (யாரோ)இந்த உலகம் தொடங்கியதில் இருந்து, இன்று வரை உலகத்தில் மிகப்பிரபலமான வெற்றியாளர்கள் என்று அறியப்படும் பலரும் அத்தனை எளிதாக அந்த இடத்தை அடைந்துவிடவில்லை. தளராத மனதோடு அவர்கள் செய்த தொடர்ச்சியான முயற்சிகளே, அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலகம் தட்டையானது என்று மதகுருமார்கள் சொல்வதை எதிர்த்த கலிலியோவின் இறப்பு, நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் இறுதிவரை தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே அவர் உண்மையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் தோனி வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. உண்மையில் வாழ்க்கையில் எத்தனை பெரிய எதிர்நீச்சல் போட்டு அவர் இன்று உலக அளவில் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்; என்பதை அறிய முடிகிறது. அவருடைய முதல் பேட்டிங் அனுபவங்கள், ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக என்று பலவற்றிலும் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத அவருடைய பயணமே அவருடைய வெற்றிக்கும் , இன்றைய அவருடைய புகழ்வெளிச்சத்திற்கும் காரணமாகும்.
இலக்கை அடைய 'எதிர்ப்புகள் இல்லாத பயணம்சுகமானதாக இருக்கும்ஆனால் வலுவானதாக இருக்காது' (சதா பாரதி)நாம் அனைவரும் ஆசைப்படுவது எதிர்ப்புகள் ஏதுமின்றி நம்முடைய இலக்கினை அடைய வேண்டும் என்பதாகவே உள்ளது. ஆனால் எதிர்ப்புகள் இல்லாத பயணத்தில், எப்போதும் நம்முடைய திறமைகள் வெளிப்படுவதில்லை. தேடல்களும், அதனால் வரும் இன்பங்களும் கிடைப்பதில்லை. உப்பு சப்பில்லாத ஒரு வெற்றியை(?) பதிவு செய்வதாகவே இருக்கும். அந்த வெற்றி வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு வடுவாக மாறிவிடும். உங்கள் இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகையில் மிகவும் கடினமான பாதையினைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள். அந்த பாதை உங்களுக்குள் இருக்கும் உண்மையான உங்களை அறிமுகம் செய்யும். ஓவ்வொரு பயணமும், ஒவ்வொரு அனுபவமும் எதையாவது நமக்கு கற்றுக் கொடுக்கும் என்றே வாழ்வை எதிர்கொள்ளுங்கள்அதிகமான இழப்புகளைச் சந்தித்தவர்களே, இந்த உலகிலே வலிமையான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஹெலன் கெல்லர் வாழ்க்கையைப் படிக்கும்போதெல்லாம் நம்மை அறியாமல் நாம் சாதித்தவைகள் ஒன்றுமில்லை என்பதாகவே தோன்றும்.
ஆபிரஹாம் லிங்கன், சுவாமி விவேகானந்தர், பாரதி என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒற்றைக்காலில் தாண்டி உலகத்தை நம் தமிழகம் பக்கமாக திரும்ப வைத்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சகோதரன் மாரியப்பன் தங்கவேலு போன்றோர் நமக்கு நிகழ்கால நிதர்சனம். சாதாரண காய்கறி வியாபாரத்தை செய்து வந்தவர் அவனுடைய தாயார். அந்த ஊரிலே அவர்களுக்கு நிலையாக தங்குவதற்கு வீடின்றி கஷ்டப்பட்டதாக பேட்டி தந்த போது கண்களிலே கண்ணீர் எட்டிப்பார்த்தது. தாயாருடைய துயர் மட்டுமின்றி தாய்நாட்டின் துயரையும் துடைத்த அந்த மாரியப்பனைப் பார்க்கையிலே, நமக்கு வரும் துயரமெல்லாம் அவர்கள் பட்டதிலே ஒரு எள்முனையளவு கூட இல்லை என்றே தெரிய வருகிறது.
ஒவ்வொரு முறையும், நமக்கான முயற்சிகள் தொடங்கும்போதே நாம் இலக்கினை அடைந்துவிட்டோம் என்ற எண்ணத்தோடு நெருங்க வேண்டும். அவ்வாறு நாம் நெருங்கும்போதுதான் வெற்றி எனும் இலக்கு நம்மை நோக்கி வரும்.
எண்ணங்கள் 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'என்பது வள்ளுவர் வாக்கு.நம்முடைய மனதிலே நாம் எண்ணும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்குள் விதைத்துச் சென்றவர். நம்முடைய மனம் நமக்கு மிகப்பெரிய வரம். ஆயிரம் கணினிகளால் செய்ய முடியாத பல ஆச்சர்யங்களை அடுத்த நிமிடத்தில் நிகழ்த்திக்காட்டும் வல்லமை பெற்றது. ஆனால் நாம் எப்போதும் எதிர்மறையாக நினைத்து நம்முடைய மனதையும் அதற்கு பழக்கப்படுத்திவிட்டோம். உண்மையில் நாம் நம்முடைய இலக்கினை எவ்வித தடையும் இன்றி அடைய வேண்டும் என்றால் முதலில் அந்த இலக்கினை நம்முடைய மனம் நினைக்க வேண்டும். வரும் தடைகளை தடைகளாக நினைக்காமல் அனுபவங்களாக எண்ண வேண்டும். அந்த அனுபவங்கள்தான் நம்மைச் சரியான திசையை நோக்கி அழைத்துச் செல்லும்.
கடைசி நிமிடத்தில்தோல்வி கிடைத்ததா?வாழ்த்துக்கள்நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள்என்பதை மனதிலே நிறுத்திக் கொள்ளுங்கள்.மாற்றங்கள் மாற்றங்களை எல்லாம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் நல்ல எண்ணங்களை தனக்குள் விதைக்க ஆரம்பிக்கும்போதுதான், இந்த சமூகம் நல்ல மாற்றங்களை நோக்கி நடைபோடும். வருடந்தோறும் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து நமது வேடந்தாங்கலை நோக்கி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை நம்பிக்கையோடு இலக்குகளை நிர்ணயித்து லட்சியத்தை அடைகிறது. அந்த லட்சியமும் மனோதிடமும் உள்ளவர்கள் ஒரு போதும் சாதாரண தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். தனது இலக்கினை மனதிலே பதியவைத்து விட்டு அதை அடையும் வரை, தான் பார்க்கும் அத்தனையிலும் அந்த லட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
பலமுறை தோல்விகளைச் சந்தித்து, கால்களை இழந்து விடுேவாம் என்ற தருணத்திலே கூட, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தே தீருவோம் என்று அடைந்து கொடி நாட்டிய எட்மண் ஹிலரி, டென்சிங் சாதனை சாதாரணமல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போராட்டம். தேர்தல்கள் பலவற்றிலும் தோல்விகளைச் சந்தித்த பின்னர், அமெரிக்காவின் அதிபராக வந்து சாதித்த ஆபிரஹாம் லிங்கன், உலகத்திற்கு நல்வழிகாட்டிய அப்துல் கலாம் ஆகியோர் கடந்து வந்த பாதை சாதரணமானதல்ல. அத்தனை தடைகளையும் தான் கொண்ட உறுதியினாலும் நம்பிக்கையாலும் தகர்த்தெறிந்தவர்கள்.
'கனவு மெய்ப்பட வேண்டும்'என்பார் பாரதி. கனவு காணுங்கள் என்று அதை இன்னும் மெருகேற்றி அனைவருடைய மனதிற்கும் கொண்டு சேர்த்தவர் அப்துல்கலாம். மனம் முழுவதும் நாம் அடைய வேண்டிய உயரங்கள் குறித்த சிந்தனையோடு, அடுத்தவர்களுடைய வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்காமல் தொடர்ச்சியான முயற்சியோடு இயங்குதல் அவசியமாகிறது. இந்த உலகிலே நம்மால் எட்டிப்பிடிக்க இயலாத உயரம் என்பது ஏதுமில்லை. சிரமங்கள் பாராமல் போராடினால் சிகரங்களும் நமக்கு வழிவிடும்.